இந்தியா

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 9 சடலங்கள்..! தாய், மகள் இருவருடனும் காதல்..! ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொலை செய்த இளைஞர்..! நெஞ்சை உறையவைக்கும் வாக்குமூலம்.!

Summary:

9 members murdered in telungana varangal case update

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் வாரங்கள் அருகே உள்ள கிணற்றில் இருந்து 9 பேரின் சடலங்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் கொலையாளியை கைது செய்துள்ளன்னர்.

இந்நிலையில் கொலையாளி கொடுத்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதலில் தற்கொலை எந்த கருதப்பட்ட வழக்கில் போலீசார் பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் என்ற தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தியதில் 9 பேரையும் தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டான்.

இதுகுறித்து அவன் கொடுத்த வாக்குமூலத்தில், கொலைசெய்யப்பட்டு இறந்தவர்களில் ஒருவரான நிஷாவின் அக்கா மகள் ரபீகா என்பவர் தனது 16 வயது மகளுடன் அதே தொழிற்சாலையில் வேலைபார்த்ததாகவும், அவர்தான் சஞ்சய் குமாருக்கு சாப்பாடு செய்து கொடுத்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே ரபீகாவின் 16 வயது மகளுடன் சஞ்சய் குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துவந்தநிலையில், இந்த தகவல் ரபீகாவிற்கு தெரியவர அவர் சஞ்சய் குமாரை கண்டித்துள்ளார். இந்நிலையில் சிறுமியை தனியாக ரயில் அழைத்துச்சென்று அவர் கழுத்தில் துப்பட்டாவை சுற்றி கொலை செய்து வீசிவிட்டு ரயிலில் இறந்து இறங்கி மீண்டும் வாரங்கள் வந்துள்ளான் சஞ்சய் குமார்.

தனது மகள் எங்கே என ரபீகா கேட்க, அவர் பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டதாக சஞ்சய் கூறியுள்ளான். இதனை நம்பாத ரபீகா போலீசில் புகார் கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட சஞ்சய், அன்று நடத்த பிறந்த நாள் கொண்டதில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அங்கு இருந்த 9 பேரையும் மயக்கமடைய வைத்துள்ளான்.

அனைவரும் மயங்கி விழுந்த நிலையில் தனி ஆளாக 9 பேரையும் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளான் சஞ்சய் குமார். ஒரு கொலையை மறைக்க மேலும் 9 பேரை கொலை செய்துள்ளான் சஞ்சய் குமார்.


Advertisement