13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
பூட்டிய வீட்டில் 9 பிணங்கள்.. கதவை திறந்து பதறிப்போன அதிகாரிகள்.. நடந்த பேரதிர்ச்சி பரபரப்பு சம்பவம்..!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பூட்டிய வீட்டில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு வீட்டில் 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் மாணிக்கம் மற்றும் போபாட் வான்மோர் சகோதரர்களின் குடும்பம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் மூத்த சகோதரர் மாணிக்கம் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவரின் வீட்டில் 6 உடல்களும், இரண்டாவது சகோதரரான போபாட் வீட்டில் 3 உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லாத நிலையில், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர் என்றும் சந்தேகம் இருப்பதால், இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
மேலும் உயிரிழந்தவர்களின் வீட்டருகே உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில், இறந்த குடும்பத்தினர் பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனால் கடன் கொடுத்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.