ஷாக்கிங் சம்பவம்... 12 வயது சிறுமிக்கு ஆட்டோவிற்குள் பாலியல் துன்புறுத்தல்.!7th-standard-student-was-sexually-harmed-by-an-auto-dri

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவர்  காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கமான ஆட்டோ ஓட்டுநருக்கு பதிலாக புதிய ஆட்டோ ஓட்டுனர் வந்திருக்கிறார்.

Indiaஅப்போது இந்த மாணவி மட்டும் தனியாக ஆட்டோவில் வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஆட்டோ டிரைவர் அந்த சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பயத்தில் கதறி அழுதுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் ஆட்டோவை பின்தொடர்ந்து வந்து மடக்கிப் பிடித்தனர்.

Indiaஇதனைத் தொடர்ந்து சிறுமி இடம் விசாரித்த போது ஆட்டோ ஓட்டுனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.