தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
6 வயது சிறுவன் கேன்சரால் மரணம்.. தாய்-தந்தைக்கு தெரியாமல் எடுத்த முடிவு.. கண்களில் நீரை வரவழைக்கும் சோக செய்தி..!
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றுள்ள இளம் தலைமுறை பல சீர்கேடுகளை சந்திப்பதாக நாம் ஆதங்கத்தில் பொங்கினாலும், அதனை நல்வழியில் உபயோகம் செய்யும் சில சிறுவர்களால் நாம் மனதளவில் கரையும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.
மருத்துவர்கள் பேசுவதைக் கண்டு தனக்கு வந்துள்ள நோய் கேன்சர் என்பதை உணர்ந்து கொண்ட ஆறு வயது சிறுவன், தனது பெற்றோரிடம் விஷயத்தை மறைத்து அவர்களுக்காக 8 மாதங்கள் உயிரை தக்க வைத்து இறுதியில் உயிரைத் துறந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாத தனது 6 வயது மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் சிகிச்சைக்காக சென்றிருந்தனர். அந்த சமயம் சிறுவனை பரிசோதித்த மருத்துவருக்கு சிறுவனுக்கு புற்றுநோய் நான்காவது அபாய கட்டத்தில் இருப்பது உறுதியானது.
இதனையடுத்து பெற்றோரிடம் தகவலை தெரிவித்த மருத்துவர், புற்றுநோய் என்ற தகவலை நேரடியாக கூறாமல் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் மகனை காப்பாற்றும் பொருட்டு பெற்றோரும் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவிக்க, சிகிச்சைக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே மருத்துவர்கள் பேசிக்கொள்வது மற்றும் மருத்துவ அறிக்கையை பார்த்து அரைகுறையாக படித்து தெரிந்த அந்த சிறுவன், செல்போனில் பார்த்து தனக்கு வந்துள்ளது புற்றுநோய், நான் உயிர் வாழ நீண்ட நாட்கள் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். இதனால் தனது தாய், தந்தையின் நிலையை எண்ணி மிகவும் மனது உடைந்து போன சிறுவன், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது தாய்-தந்தையை ஒருவித ஏக்கத்தோடு கண்டிருக்கிறான்.
மகனுக்கு நோய் விரைவில் சரியாகிவிடும் என ஆறுதல் கூறி பெற்றோரும், மகனுக்கு உற்ற துணையோடு இருந்த நிலையில், அறுவை சிகிச்சையும் நிறைவு பெற்று உடல்நிலை சரியாகி டாக்டரை பார்ப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுவனிடம் இனி உனக்கு எந்த தொந்தரவும் இல்லை என்று தைரியமூட்டினாலும், பெற்றோரை வெளியே செல்ல சொன்ன சிறுவன் நான் உங்களிடம் தனியாக பேச வேண்டுமென மருத்துவரிடம் கோரிக்கை வைத்துள்ளான்.
அப்போது மருத்துவரிடம் எனக்கு வந்திருப்பது புற்றுநோய் என்பது எனக்கு தெரியும். நான் இன்னும் சில மாதங்கள் மட்டுமே நான் வாழ்வேன் என்பதும் எனக்கு தெரியும். இந்த விஷயத்தை எனது பெற்றோரிடம் சொல்ல வேண்டாம். அவர்களால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது என கூறி இருக்கிறான். சிறுவனை மருத்துவர் ஒன்றும் ஆகாது நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி அனுப்பினாலும், அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
இதனால் பெற்றோரை அழைத்து அவர்களின் மகனின் நிலையை கூறிவிட்டு நீங்கள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், 9 மாதம் கழித்து சிறுவனின் பெற்றோர் மருத்துவரை காண நேரில் வந்த போது, மகன் எப்படி இருக்கிறான் என மருத்துவர் விசாரித்து இருக்கிறார். அவன் எங்களுடன் இன்று இல்லை என கனத்த இதயத்துடன் தெரிவித்த பெற்றோர், எங்களது மகளை கூடுதலாக 8 மாதம் வாழவைத்த உங்களுக்கு நன்றி என்று கூறி கண்ணீருடன் அங்கிருந்து விடைபெற்று சென்றுள்ளனர்.