அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அடக்கடவுளே.! 6 ஆம் வகுப்பு சிறுவனுக்கு மாரடைப்பு.. நாட்டையே உலுக்கிய அதிகாலை சம்பவம்.!
குஜராத் மாநிலத்தின் துவாரகா விஜாபூர் எனும் கிராமத்தில் ஒரு 6 ஆம் வகுப்பு சிறுவன் அதிகாலை நேரத்தில் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்துள்ளான்.

சிறுவன் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை உடனடியாக தூக்கிக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இளம் வயது மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கோவிட் தடுப்பூசி தான் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்த 6 ஆம் வகுப்பு சிறுவன் துஷ்யந்த் இதுவரை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதை அவருடைய தந்தை உறுதி செய்துள்ளார்.