மருத்துவமனையில் தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற 6 வயது பேரன்! நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ!

மருத்துவமனையில் தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற 6 வயது பேரன்! நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ!


6 year old old boy pushing grandfather's stretcher

உத்தரப் பிரதேச மாநிலம் டியோரியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முதியவர் செடி யாதவ் என்பவர் உடல்நிலை கோளாறு காரணமாக  2 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்த்துக்கொள்வதற்கு அந்த முதியவரின் மகள் பிந்து யாதவ் மற்றும் பேரன் மருத்துவமனைக்கு உடன் வந்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு முதியவரை அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு முறையும் வார்டு உதவியாளர் பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பணத்திற்கு சிரமப்படும் அவர்கள் முதியவரை அழைத்துச் செல்வதற்காக ஒவ்வொரு முறையும் வார்டு உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியாமல், முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து 6 வயது பேரனும், முதியவரின் மகளும் ஸ்ட்ரெச்சரை இழுத்துச்சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், டியோரியா மாவட்ட மாஜிஸ்திரேட்அமித் கிஷோர் திங்கள்கிழமை மருத்துவமனைக்குச் சென்று செடி யாதவின் குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து மருத்துவமனையின் உதவி தலைமை மருத்துவ அதிகாரியின் கீழ் கூட்டு விசாரணைக் குழுவை அமைத்து, அவர்களின் விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தநிலையில் மருத்துவமனையில் வார்டு உதவியாளராக இருந்தவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.