இந்தியா

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 58 வயது முதியவர்! மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயன்றதால் ஏற்ப்பட்ட விபரீதம்!

Summary:

58 years old man escape from hospital

பஞ்சாப் மாநிலம் கல்பனா சாவ்லா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 58 வயது நபர் மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயன்ற போது விபரீதமாக உயிரிழந்த சோகம் ஏற்ப்பட்டுள்ளது.

ஹரியானாவை சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த முதியவர் சிகிச்சைக்கு வந்த நாள் முதல் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் அந்த முதியவர் மருத்துவமனையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதற்காக அவரிடம் இருந்த போர்வை மற்றும் பிளாஸ்டிக் பைகளை ஒன்று சேர்த்து கட்டி ஆறாவது மாடியின் ஜன்னலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் பிளாஸ்டிக் பைகள் அறுந்ததால் ஆறாவது மாடியிலிருந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். ஆனால் இன்னும் கொரோனா தொற்று உறுதியாத நிலையில் முதியவரின் இந்த செயல் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவமனையின் பாதுகாப்புகள் பற்றியும் கேள்வி எழுந்துள்ளது. 


Advertisement