பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர்!! டெலிவரி செய்த ஆன்லைன் நிறுவனத்திற்கு 55000 அபராதம்!! ஏன் தெரியுமா?

பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர்!! டெலிவரி செய்த ஆன்லைன் நிறுவனத்திற்கு 55000 அபராதம்!! ஏன் தெரியுமா?



55000-benality-to-zomato-food-delievery

தற்காலத்தில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் புனேவை சேர்ந்த வழக்கறிஞரான சண்முக் தேஷ்முக் என்பவர் சொமாட்டோ செயலியின் மூலம் சைவ உணவான பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்துள்ளார். 

ஆனால் சொமாட்டோ அசைவ உணவான சிக்கன் மசாலாவை டெலிவரி செய்தது. இந்நிலையில் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சண்முக் இதுகுறித்து பூனே நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

chicken masala

 அதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது சொமாட்டோ நிறுவனம் இதில் தங்களது தவறு எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்ட உணவகம்  உணவை மாற்றி கொடுத்ததாகவும் விளக்கமளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சொமாட்டோ மற்றும் உணவகத்திற்கு 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவித்தது. மேலும் இந்த அபராதத்தை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில். பனீர் மசாலா மற்றும் சிக்கன் மசாலா இரண்டுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தது. சாப்பிட்ட பின்பே சிக்கன் என்பது தெரியவந்தது என கூறியுள்ளார்.