நடுக்கடலில் பிறந்த நாள் கொண்டாடிய 5 வயது சிறுமி.. அதற்கு அவர் சொன்ன காரணம்.. குவியும் வாழ்த்துக்கள்..

நடுக்கடலில் பிறந்த நாள் கொண்டாடிய 5 வயது சிறுமி.. அதற்கு அவர் சொன்ன காரணம்.. குவியும் வாழ்த்துக்கள்..


5 years mumbai girl celebrated her birthday at mid ocean

5 வயது சிறுமி ஒருவர் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவமும், அதற்கு அவர் கூறிய காரணமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் 5 வயது சிறுமி உர்வி. இவரது தந்தை நினாட் மும்பை சிறப்பு படை போலீஸ் பிரிவில் போலீஸ்காராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உர்வி சமீபத்தில் தனது 5 வது பிறந்தநாளை கொண்டாட தயாராகியுள்ளார். ஆனால் இந்த பிறந்தநாளை சற்று வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார் உர்வி.

வழக்கம் போல் தனது நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இல்லாமல், பெண் குழந்தைகளை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தனது பிறந்தநாளை நடுக்கடலில் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

இதற்கு உர்வியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து உர்வி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமியின் பிறந்தநாள் அன்று அர்னாலா கடற்கரைக்கு சென்று படகு மூலம் கரையில் இருந்து 3.6 கி.மீ. தூரம் (2 நாட்டிகல் மைல்) கடலுக்குள் சென்றனர். அனைவரும் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள் அணித்திருந்தநிலையியல் சிறுமி உர்வி தனது தந்தையுடன் கடலுக்குள் இறங்கி, தெர்மாகோல் மூலம் மிதந்துகொண்டிருந்த கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர்.

பெண் குழந்தைகளை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் சிறுமி உர்வி செய்த காரியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளநிலையில் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.