நள்ளிரவில் நடந்த விபத்து.! 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.!

நள்ளிரவில் நடந்த விபத்து.! 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.!


5-people-died-in-fire-accident

கேரளா மாநிலம்  திருவனந்தபுரம் அருகே வர்க்கல பகுதியில் வீட்டில் ஏற்பட்ட  தீ விபத்தில் 8 மாத குழந்தை உட்பட  5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளது.

இந்தநிலையில் இவரது வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வீட்டினுள்ளில் தூங்கி கொண்டிருந்த பிரதாபன், அவரது மனைவி ஷெர்லி, மருமகள் அபிராமி, இளைய மகன் அகில் மற்றும் 8 மாத குழந்தை உட்பட 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.