மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து.! பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு.!32-people-died-in-mumbai-bulding-accident

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை என்பதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த பலரை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

அங்கு நடந்த கட்டிட விபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.