இந்தியா

பாவம்..!! 2 மாத பெண் குழந்தை உட்பட 3 பேர் வீடு இடிந்து விழுந்து மரணம்.. அசாமில் பெய்யும் கனமழையால் நிகழ்ந்த பரிதாபம்..

Summary:

அசாமின் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் பெய்த மழையால் மூன்று பேர் உயிரிழந்தனர்.

அசாமின் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் பெய்த மழையால் மூன்று பேர் உயிரிழந்தனர்.

அசாமின் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வீடு ஒன்று இடிந்தநிலையில், ஆயிஸா பேகம் (35), அவரது இரண்டு மாத மகள் குசி பேகம் மற்றும் எட்டு வயது மகன் அமின் லாஸ்கர் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் மூன்று குடும்ப உறுப்பினர்களும் காயமடைந்துள்ளனர், அவர்கள் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அமினுல் ஹக் லஸ்கர், மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளனர்.


Advertisement