வீட்டு தண்ணீர் தொட்டியை உரிமையாளர் திறந்து பார்த்தபோது கண்ட பேரதிர்ச்சி! மொத்தம் 27 குட்டி போட்ட தாய் பாம்பு.... பகீர் வீடியோ..!!!



27-snake-hatchlings-found-in-water-tank-odisha

ஒடிசா மாநிலத்தின் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் 27 பாம்புக் குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் வழக்கம்போல் தொட்டியை திறந்து பார்த்தபோது இந்த அதிர்ச்சி காத்திருந்தது. தகவலறிந்த வனத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தண்ணீர் தொட்டியில் நெளிந்த பாம்புக் குட்டிகள்

தகவலின்படி, வீட்டு பயன்பாட்டிற்காக தண்ணீர் எடுக்க தொட்டியை திறந்த வீட்டின் உரிமையாளர், அதன் உள்ளே ஏதோ அசைவு இருப்பதை கவனித்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது ஏராளமான பாம்புக் குட்டிகள் தொட்டிக்குள் நெளிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

மீட்புக் குழுவினரின் தீவிர நடவடிக்கை

அதன்பின் சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு மீட்புப் படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீர் தொட்டிக்குள் சோதனை நடத்தினர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அங்கு மறைந்திருந்த 27 விஷப் பாம்புக் குட்டிகளையும் ஒவ்வொன்றாக பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.

இதையும் படிங்க: பெண்கள் விடுதியில் இருந்த மர்மபெட்டி! நடுங்கி போய் நடுராத்திரியில் அலறிய மாணவிகள்... நெஞ்சை உலுக்கிய 1 மணி நேர திக் திக் நிமிடம்..!!!

வனப்பகுதியில் விடுவிப்பு

மீட்கப்பட்ட அனைத்து பாம்புக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அவை விடுவிக்கப்பட்டன. கோடைக்கால வெப்பம் காரணமாகவோ அல்லது முட்டையிட ஏற்ற இடமாக கருதியதாலோ தாய் பாம்பு தண்ணீர் தொட்டிக்குள் புகுந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: ஒரே இரவில் இரண்டு குழந்தைகளை இழந்த குடும்பம்! படுக்கைக்குள் சுருண்டு கிடந்த எமன்...விடிந்ததும் நீல நிறமாக மாறிய 2 குழந்தைகளின் உடல்! நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!!