இளம் பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உல்லாசம்! 3 வருடம் கழித்து அந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!

மும்பையை சேர்ந்த பிஸியோதெரபிஸ்டான 24 வயது இளம் பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் கீழ்தளத்தில் உறங்கியுள்ளார். இளம் பெண் தனியாக உறங்குவதை பார்த்த
அந்த பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலை பார்க்கும் தேபாஜிஸ் என்ற இளைஞர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் ஏறி குதித்து சென்றுள்ளார்.
மேலும், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார் தேபாஜிஸ். இதனிடையே அந்த இளம் பெண்ணிற்கும் அந்த இளைஞருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அந்த இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்துடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் கொலைக்கான அடையாளங்களை மறைக்க அங்கிருந்த பொருட்களை அந்த பெண்ணின் மீது போட்டு தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். காலை எழுந்து தனது மகளை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து நடந்த தீவிர விசாரணையில் போலீசார் அந்த இளைஞனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். கடந்த 3 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது அந்த இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.