"ஆல் இஸ் வெல்...நண்பன்‌ பட ஸ்டைலில் வீடியோ காலில் செய்த சிசேரியன்..." அதித இரத்தப்போக்கால் பலியான 22 வயது கர்ப்பிணிப் பெண்!



22-year-old-pregnant-woman-died-in-labour-after-operate

பீகார் மாநிலத்தில்  பிரசவத்தின் போது  22 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறையைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் விசாரணை செய்த அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என  காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பாட்னாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில்  22 வயது இளம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த  செவிலியர் ஒருவர் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

India

மருத்துவரை தனது செல்போனில் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட நர்ஸ் அவரது வழிகாட்டுதலின்படி பிரசவ அறுவை சிகிச்சை செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த அறுவை சிகிச்சையின் போது  அந்தப் பெண்மணியின் வயிற்றில் இருந்த முக்கியமான நரம்பு ஒன்றை அவர்  வெட்டியதால் அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்தப் பெண் மரணம் அடைந்ததாக  முதல் கட்ட தகவல் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

மேலும் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த பெண்மணியின் குடும்பத்தார் வற்புறுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சுகாதார துறையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் விசாரித்து  நடவடிக்கை எடுப்பார்கள் என காவல்துறை அறிவித்துள்ளது. ஒரு நர்ஸ் எவ்வாறு அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.