கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
கடைசியாக சிக்கன் சாப்பிட்டவர் உயிர் இழப்பு.! கொரோனோவா இருக்குமோ.? மருத்துவர்கள் தீவிர ஆய்வு..!

கடைசியாக சிக்கன் சமைத்து சாப்பிட்டவர் வயிற்றுபோக்கு மற்றும் மூச்சு திணறல் காரணமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த கிபருல் இஸ்லாம் என்ற 21 வயது வாலிபர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி வேலை பார்த்துவந்துள்ளார். தற்போது ஊரடங்கு என்பதால் நண்பர்கள் அனைவரும் வீட்டிலையே இருந்தநிலையில், வீட்டில் சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
சிக்கன் சாப்பிட சில மணி நேரத்தில் கிபருல் இஸ்லாமுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மருத்துவமனை வந்த சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி கிபருல் இஸ்லாம் உயிரிழந்துள்ளார்.
தாங்கள் அனைவரும் சிக்கன் சமைத்து சாப்பிட்டதாக அவருடன் வந்த நண்பர்கள் மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், கிபருல் இஸ்லாம் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழந்ததால் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இரத்த மாதிரி அறிக்கை வந்த பிறகே அந்த இளைஞர் எதனால் உயிரிழந்தார் என்பது தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், கிபருல் இஸ்லாமின் நண்பர்களையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.