இந்தியா

2020 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்! ஆவலுடன் எதிர்பார்க்கும் பொதுமக்கள்!

Summary:

2020 budget


2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் இன்று காலை சரியாக 11 மணிக்கு கூடியது. மக்களவைக் கூடியதும், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையை தொடங்கினார்.

* இந்தியாவில் படிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம் ஆசிய, ஆப்ரிக்க மாணவர்களுக்காக SAT தேர்வு நடத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

* 2023க்குள் 2 மிகப்பெரிய வர்த்தக வழித்தடங்கள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.

* மத்திய பட்ஜெட் தாக்கல் - கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கடன் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் - கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 %  இருந்து 48% குறைந்துள்ளது.

* கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க இலக்கு, விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என நிதியமைச்சர் கூறினார்.

* கல்வித்துறைக்கு 99,300 கோடி நிதி ஒதுக்கீடு, சென்னை பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம், பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒரு வருட இன்டர்ன்ஷிப் பயிற்சி. 

* தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பெண்கள் உள்ளிட்டோரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் நோக்கம் கொண்டுள்ளது  என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Advertisement