எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்த 2 பெண் சடலம்... அதிர்ச்சியில் கிராம மக்கள்..!!



2 dead bodies of women lying on the roadside in a burnt state... Villagers in shock..

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புடான் மாவட்டத்தில், பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு பாதி எரிந்த நிலையில் இரண்டு பெண்களின் உடல்கள் சாலையோரம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த பெண்களின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து இருந்தது. இரண்டு பெண்களையும் கொலை செய்து உடல்களை  வீசியுள்ளனர். இதுகுறித்து பச்சி ஜாஜ்ராவ் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புடான் மாவட்டத்தில் கக்ராலா நௌலி சாலையோரத்தில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பெண்களின் வயது சுமார் 35 இருக்கும். உடல்களை பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்டு, சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்தது என்றார்.

இதைத் தொடர்ந்து உடல்களை உடற்கூராய்விற்கு அனுப்பி, அவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், மேலும் வழக்கு பதிவு செய்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.