இந்தியா

அடேங்கப்பா! இரண்டு அவிச்ச முட்டையின் விலை இவ்வளவா!! பில்லை பார்த்து ஆடிப்போன வாடிக்கையாளர்!!

Summary:

2 boiled eggs price 1700

மும்பையில் உள்ள ஓர்லியில் போர் சீசன்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் கார்த்திக் தார் என்பவர் சாப்பிட சென்றுள்ளார் அப்போது அவர் இரு அவித்தமுட்டை, ஆம்லெட் என பல உணவுகளை சாப்பிட்டு உள்ளார். பின்னர் சாப்பிட்டுமுடித்த அவர் பில்லை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில் இரு அவித்த முட்டையின் விலை ரூபாய் 1700 என இருந்தது. மேலும் ஒரு ஆம்ப்லெட்டின் விலையும் அவ்வாறே இருந்துள்ளது. இந்நிலையில்  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பில்லின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இதனைப் போலவே ஏற்கனவே கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த நடிகர் ராகுல் போஸ் j w மேரியாட் என்ற நட்சத்திர ஹோட்டலில் இரு வாழைப்பழங்கள் சாப்பிட்டார். அதற்கு ஜிஎஸ்டி உடன் சேர்ந்து ரூபாய் 442 பில் வந்தது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் பெரும் சர்ச்சைகள் எழுந்தது.

 இந்நிலையில் தற்போது கார்த்திக் தார்,  ராகுல் போஸ் ட்விட்டர் பக்கத்தை இணைத்து இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கலாமா என கேட்டுள்ளார்.  இந்நிலையில் இதனை கண்ட நெட்டிசன் ஒருவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த கோழியாக இருக்குமோ என்று கிண்டலாக தெரிவித்துள்ளார், மேலும் இந்த ட்விட்டர் பதிவு  வைரலான நிலையில் இதனை கண்ட பலரும் ஹோட்டலை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
 


Advertisement