3 மாதம்.. கணக்கில்லா ஊர்கள்... 17 வயது சிறுமியை கூட்டிச்சென்று, துடிக்க துடிக்க அரங்கேறிய கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி.!
3 மாதம்.. கணக்கில்லா ஊர்கள்... 17 வயது சிறுமியை கூட்டிச்சென்று, துடிக்க துடிக்க அரங்கேறிய கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி.!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமி கடந்த மே மாதம் 29ஆம் தேதி அவர் வசித்து வரும் பகுதியைச் சேர்ந்த அஜித் ராம் என்ற 21 வயது இளைஞரால் கடத்தப்பட்டார். இது பற்றி சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை தேடி வந்தனர்.
பதுங்கி இருந்த நிலையில் அஜித் ராம் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமி அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடத்திச் சென்ற மூன்று மாதங்களாக பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அஜித் ராம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, மூன்றரை மாதங்களாக சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.