தராசை தண்டவாளத்தில் வீசிய போலீசார்.! எடுக்கச் சென்ற சிறுவனுக்கு கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்! வைரலாகும் ஷாக் வீடியோ!!

தராசை தண்டவாளத்தில் வீசிய போலீசார்.! எடுக்கச் சென்ற சிறுவனுக்கு கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்! வைரலாகும் ஷாக் வீடியோ!!


17-year-boy-loss-his-leg-in-kanpur-uttarapradesham

உத்திரபிரதேசம் மாநிலத்தில் போலிசாரின் அலட்சிய செயலால் 17 வயது சிறுவன் தன் கால்களை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கல்யாண்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தின் அருகே இர்பான் என்ற 17 வயது சிறுவன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளான். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது.

அப்பொழுது போலீஸார்கள் ரயில் நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழ வியாபாரம் வியாபாரம் செய்து வந்த இர்ஃபானை கடையை காலி செய்ய கூறியுள்ளனர். மேலும் பழங்கள் மற்றும் தராசு தட்டை தண்டவாளத்தில் தூக்கி வீசியுள்ளனர். இந்த நிலையில் போலீசார் வீசிய அந்த தராசு தட்டை எடுக்க சிறுவன் இர்ஃபான் சென்ற போது வேகமாக வந்த ரயில் அவரது காலில் மோதியது.

இதில் அவரது கால்கள் துண்டானது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நரம்பு பெருமளவில் சேதமடைந்ததால் அவரது காலை மீண்டும் பொருத்த முடியாது என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுவன் கால்களை இழக்க காரணமான தலைமை காவலர் ராகேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைக்கு பிறகு அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.