வீடியோ: பார்க்கவே பயமா இருக்கு!! இந்தியாவிலையே மிக அதிவேகத்தில் செல்லும் ரயில்!! ரயில் போகும் வேகத்தை பாருங்க..

வீடியோ: பார்க்கவே பயமா இருக்கு!! இந்தியாவிலையே மிக அதிவேகத்தில் செல்லும் ரயில்!! ரயில் போகும் வேகத்தை பாருங்க..



155 KMPH GATIMAAN EXPRESS viral video

இந்தியாவிலையே மிக அதிவேகமாக செல்லக்கூடிய கதிமான் விரைவு ரயில் செல்லும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமான ஒன்று. உலகிலையே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், தங்கள் அன்றாட பணிகளுக்காக மக்கள் ரயில் போக்குவரத்தை மிகவும் முக்கியமான ஒன்றாக நம்பியுள்ளனர்.

மின்சார ரயில், மெட்ரோ ரயில், மோனோ ரயில், அதி விரைவு ரயில் என இந்தியாவில் ரயில் சேவை பல விதங்களில் வழங்கப்பட்டுவருகிறது. இதில் அதிவிரைவு ரயில்கள் நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுகிறது. இந்தியாவில் பலவிதமான அதிவிரைவு ரயில்கள் இருந்தாலும், அதில் மிகவும் வேகமான ரயில் என்றால் அது கதிமான் விரைவு ரயில் தான்.

கதிமான் விரைவு வண்டியை இந்திய ரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி தில்லியில் இருந்து கிளம்பி ஆக்ரா வரை சென்று திரும்பும். இந்த வண்டி மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும். இது இந்தியாவில் இயங்கும் தொடர்வண்டிகளிலேயே அதிக வேகத்தில் செல்லக் கூடியது. இந்த வண்டி நூறு நிமிட நேரத்தில் இலக்கை அடைந்துவிடுகிறது.

இனிநிலையில் கதிமான் விரைவு ரயில் ஒரு ரயில் நிலையத்தை அதிவேகத்தில் கடக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பிரமிக்கவைத்துள்ளது. இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்க.