15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல்.. தாய், தந்தையை பார்க்க சென்றபோது நடந்த பயங்கரம்..!!

15 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல்.. தாய், தந்தையை பார்க்க சென்றபோது நடந்த பயங்கரம்..!!


15 years old girl gangraped by 4 members

15 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை தெற்குபகுதியில் அமைந்துள்ள ஆசிரமத்தில் தங்கியிருக்கும் 15 வயது சிறுமி, சம்பவத்தன்று கடந்த ஜூலை மாதம் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். 

அப்போது டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றி வந்த அபிமன்யு சரோஜ் என்பவர் சிறுமிக்கு உதவி செய்வதாக கூறி, அவரை கடத்திச் சென்று தனது நண்பர்கள் உட்பட 4 பேருடன் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அவர்களின் மிரட்டல் காரணமாக எதையும் வெளியே கூறாமல் இருந்த வந்த நிலையில், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி அவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது. 

Mumbai

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் நிலையை உணர்ந்துகொண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமாகவே, தனிப்படை அமைத்த காவல்துறையினர் முக்கிய குற்றவாளி உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.