இந்தியா

குளிரில் நடுங்கிய குடும்பம்.. குளிர்காய மூட்டிய தீ.. தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மூச்சுத்திணறி மரணம்.. சோக சம்பவம்

Summary:

குளிர்காய்வதற்காக புகை மூடியதால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குளிர்காய்வதற்காக புகை மூடியதால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா மராத்தி பால்யா கிராமத்தை சேர்ந்தவர் வீர ஆஞ்சனேயா. இவரது மனைவி சாந்தம்மா. இவர்களுக்கு அர்ச்சனா (15), அர்ஷிதா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். தம்பதியினர் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்துவந்துள்ளனர்.

இந்நிலையில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் கனமழை பெய்தநிலையில் இரவில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. வீர ஆஞ்சனேயா - சாந்தம்மா இருவரும் இருந்த பகுதியிலும் கடும் குளிர் நிலவிய நிலையில் கணவன் மனைவி இருவரும் ஒரு இரும்பு பீப்பாயில் விறகு கட்டைகளை போட்டு தீ மூடிவிட்டு அதில் இருந்து புகை வெளியேறியநிலையில் வீட்டின் கதவு, ஜன்னல்களை சாத்திவிட்டு மகள்களுடன் உறங்க சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அவர்கள் மூடிய தீயில் இருந்து வெளியேறிய புகை வீட்டில் இருந்து வெளியேற வழியில்லாமல் வீட்டிற்க்குள்ளையே சுற்றியுள்ளது. இதனால் அந்த புகையை நீண்ட நேரமாக சுவாசித்த வீர ஆஞ்சனேயா, அவரது மனைவி மற்றும் மகள்கள் அனைவரும் கடும் மூச்சு திணறலால் அவதிப்பட்டுள்ளனர்.

கடும் மூச்சு திணறலால் அவதிப்படுவந்த அர்ச்சனா சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தநிலையில் தற்போது அவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்துவரும் போலீசார், வீர ஆஞ்சனேயா மற்றும் அவரது மனைவி இருவரும் மூடிய தீயில் இருந்து வெளியேறிய புகையில் இருந்த கார்பன் மோன்ஆக்சைடு நச்சு புகை அறைமுழுவதும் பரவியதும், அவர்கள் அதை சுவாசித்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement