ஊரடங்கு உத்தரவு வாபஸ்! முதலமைச்சர் அதிரடி!
ஊரடங்கு உத்தரவு வாபஸ்! முதலமைச்சர் அதிரடி!

சீனாவில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதலால் நோய்த்தொற்று பரவுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்தியாவிலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளார். கர்நாடகத்தில்கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ஆம் தேதி நிறைவடைகிறது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, கர்நாடகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகழ் விளக்குகளை ஏற்றினர். கொரோனாவை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற 14-ந் தேதி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் 14-ந் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற முடியும். அதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருத்தலை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கர்நாடகம் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.