இந்தியா

கொரோனா எதிரொலி: 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு..!

Summary:

144 low

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்நோயை கட்டுப்படுத்த ராஜஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒரு இடத்தில் நான்கு பேருக்கு மேல் யாரும் கூட கூடாது என்று வழியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்நோயானது மக்கள் அதிகம் கூடும் பகுதியில் தான் வேகமாக பரவுவதால் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது ராஜஸ்தான் அரசு. இதே போல் மற்ற மாநிலங்களும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற வாய்ப்பு இருப்பதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 


Advertisement