13 வயது சிறுமிக்கு மதுபானம் ஊற்றி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. பார்ட்டிக்கு அழைத்து சென்று நடந்த பயங்கரம்..!13 years girl raped by 2 boys

தனக்கு நன்கு அறிமுகமான நண்பர்கள் என 2 இளைஞர்களோடு பார்ட்டிக்கு சென்ற 13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், கமலா நகரில் பெற்றோருடன் வசித்து வந்த 13 வயது சிறுமி, சம்பவத்தன்று மாயமாகி இருக்கிறார். அவரை பல இடங்களில் தேடியும் காணாததால் பதறிப்போன பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி 2 வாலிபர்களோடு பார்ட்டிக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் குறித்த விபரத்தை சேகரித்த காவல் துறையினர், பார்ட்டி நடந்த இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர். 

Madhya pradesh

சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சிறுமியை பார்ட்டிக்கு அழைத்து சென்று, அவருக்கு மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளனர். சிறுமி அதனை குடித்து போதையில் மயங்கியுள்ளார். 

இதனை தங்களுக்கு சாதகமாக்கிய இரண்டு இளைஞர்களும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் மறுநாள் காலையில் போதை தெளிந்ததும் சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என காத்திருந்துள்ளனர். அதற்குள்ளாக காவல் துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.