அடி தூள் சூப்பர்... 100% எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலுங்கானா மாணவர்களுக்கே...!! அரசாணை வெளியிட்ட தெலுங்கானா அரசு..!!



100-mbbs-tickets-for-telangana-studentstelangana-govt-i

தெலங்கானாவில் 2014-ஆம் வருடத்திற்கு பின்னர் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் இருக்கும் அனைத்து எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், வருடத்தில் 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில மருத்துவ சேர்க்கை விதிமுறையின்படி, மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் இருக்கும் 85 சதவிகித சீட்டுகள் மட்டுமே தெலுங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மருத்துவ சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு நிர்வாக ஒதுக்கீட்டில் இருக்கும் 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி செவ்வாய்க் கிழமை அன்று அரசாணை வெளியிட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்னர் தொடங்கப்பட்ட 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,850 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளன. இதில், 1,895 சீட்டுகள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் நிலையில், அதில் 15 சதவிகித சீட்டுகள் அனைத்து மாநில மாணவர்களையும் சேர்த்து வருகின்றனர். 

இந்த 15 சதவிகித இடங்களை பிடிக்க ஆந்திரா மற்றும் தெலங்கானா மாணவர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பெரும்பாலான சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த நிலையில், 2014ஆம் வருடத்திற்கு பின்னர் தெலங்கானாவில் தொடங்கப்பட்ட 36 புதிய மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் 100 சதவிகித எம்பிபிஎஸ் சீட்டுகளையும் தற்போது தெலங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் 2014 ஆம் வருடத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,490 எம்பிபிஎஸ் சீட்டுகள் உள்ளது. இதில், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.