ஓடிடி தளங்களை குறித்து அன்றே கணித்தார் கமலஹாசன்.. வைரலாக பரவும் பேட்டி.?
கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி.!
கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி.!
குஜராத் மாநிலத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு காரில் சூரத்திலிருந்து பாவ்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் இந்திரனாஜ் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
அங்கு நடந்த கோர விபத்தில் காரில் சென்ற இரண்டு பெண்கள், ஏழு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை என 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Saddened by the loss of lives due to a road accident in Anand district in Gujarat. Condolences to those who lost their near and dear ones. An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be provided to the next of kin of those deceased: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 16, 2021
அங்கு நடந்த விபத்து குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு அறிந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்தார். அங்கு நடந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.