பெண்கள் மேலாடை, உள்ளாடைகளை தேர்வு செய்வது எப்படி?.. இறுக்கம் இறப்பை தரவல்லது.. உஷார்.!

பெண்கள் மேலாடை, உள்ளாடைகளை தேர்வு செய்வது எப்படி?.. இறுக்கம் இறப்பை தரவல்லது.. உஷார்.!



Woman Wearing Dress Tamil Tips

காலத்திற்கேற்ப மனிதர்களின் குணம் மாறிக்கொண்டே செல்வதைப்போல, அவர்களின் உடை விஷயமும் அதிகளவு மாற்றத்தை சந்திக்கின்றன. உடலுக்கு நன்மை தந்த எளிமையான ஆடைகள் அணிவது மலையேறி, உடலுக்கு பிரச்சனையை தரவல்ல மற்றும் நமது நாட்டின் பருவநிலைக்கேற்ப உள்ள உடைகளை அணியாமல் பேஷன் என்ற பெயரில் நமது உடல்நிலையையும் கெடுத்து வருகிறோம். 

குளிர் பகுதிகள் மற்றும் குளிர்மிகுந்த நாடுகளில் அணியவல்ல இறுக்கமான ஆடைகள், ஜீன்ஸ், பாலிஸ்டர் போன்ற துணி ரகங்களை நமது நாட்டில் நாம் அணிவது நமது உடலின் நலத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. இதனை கூட உணர இயலாமல் வேறொரு பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கிறது, அதனால் மனநலம் கெடுகிறது என கற்பனையில் இருந்து வருகிறோம். 

இதில், பெண்கள் இன்றளவில் இறுக்கமான உள்ளாடைகள், பாலிஸ்டர் உள்ளாடைகள், ஜீன்ஸ், லெகின்ஸ் என்று உடலுக்கு கேடு ஏற்படுத்தும் ஆடைகளை தேடித்தேடி அணிய தொடங்கிவிட்டனர். வியாபார ரீதியாக பெரும் பொருட்செலவில், பல பொய்களை கூறி விற்பனை செய்யப்படும் ஆடைகள் நமது சூழ்நிலைக்கு எள்ளளவும் ஒவ்வாதவை. இதனை எப்போதாவது அணிந்தால் எந்த பிரச்னையும் இல்லை. எப்போதும் அணிந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்தித்தாக வேணும் என்பதே நிதர்சனம்.

ஆண்கள் அணியும் ஜீன்ஸ், பாலிஸ்டர் உள்ளாடைகளாலும் பல பிரச்சனைகள் உடல்நலம் சார்ந்து ஏற்படுகிறது. நமது உடையை நாம் அணிவது உடல் தோற்றத்தை மறைக்கவும், உடலில் காயங்கள் இருந்தால் அதனை பாதுகாக்கவும் மட்டுமே. அதனை உடலுக்கு சீர்கேடான வகையில் அணிந்தால், அது நிச்சயம் நமக்கு பாதிப்பையே தரும். இறுக்கமான உடைகளை அணிவதால் பெண்களுக்கு உடலில் இருந்து வெப்பம் வெளியேறாது. 

உடலுக்கு தேவையான காற்றும் புக வழியில்லாமல், ஒவ்வொரு நாளும் மூச்சின்றி தோள்கள் பாதிக்கப்பட்டு சிதைவுறும். இதன் பாதிப்பு மெல்லக்கொல்லும் விஷத்தை போன்றது தான். எதிர்காலத்தில் அதன் தாக்கம் தெரியவரும். ஆகையால் ஆண்கள் எக்கேடுக்கும் கெடுகிறார்கள், பெண்கள் எக்கேடும் கெடுகிறார்கள் என்ற எண்ணத்தில் விட்டுவிடாமல், இருபாலரும் தங்களுக்கு தேவையான உடைகளை தேர்வு செய்து, சரியான வகையில் அணிவது நல்லது. 

வாரத்திற்கு ஒரு முறையாவது பருத்தியினால் ஆன உள்ளாடை மற்றும் மேலாடைகளை தேர்வு செய்து உடுத்துவது உடல் நலத்திற்கு 100 விழுக்காடு நன்மையை வழங்க இயலாது என்றாலும், 6 நாட்கள் நமது உடல் இறுக்கமான மற்றும் கேடான உடையாள் சந்தித்த பாதிப்பில் இருந்து விடுமுறை அளிக்கும்.