இரவில் செய்யும் இந்த விஷயம்.. உங்கள் ஆயுளை அதிகரிக்கும்.!



Why You Should Avoid Eating Late at Night

இரவு நேரங்களில் தாமதமாக உணவு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக நாம் தூங்குவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்துக் கொள்வது மிகவும் நல்ல பழக்கமாக கருதப்படுகிறது. பொதுவாக இரவு 7 மணி முதல் 8:30 மணிக்குள் உணவு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கூறப்படுகிறது.

சீக்கிரமாக உணவு சாப்பிடுவதால், நாம் உறங்க செல்லும் முன்பே செரிமான மண்டலம் தனது பணியை சீராக முடித்து விடுகிறது. இதனால் நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிற்றுப் பொருமல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் குறையும். தாமதமாக சாப்பிடும்போது செரிமானம் முழுமையாக நடைபெறாமல் உடலுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் இரவு நேரங்களில் தாமதமாக உணவு சாப்பிடுவது உடலில் தேவையற்ற கொழுப்பு சேர காரணமாக அமைகிறது. சாப்பிட்ட பிறகு உடல் அதிக இயக்கம் இல்லாததால் கலோரிகள் எரியாமல் கொழுப்பாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் உடல் எடை அதிகரிப்பதோடு, ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே.!

Should Avoid

செரிமான பணிகள் முடிந்த நிலையில் உடல் ஓய்வெடுப்பதால் நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. அதே நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே சீக்கிரமாக உணவு சாப்பிடுவது இதயத்தின் அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் அதிகாலையில் உடல் புத்துணர்ச்சியுடன் செயல்படவும், அடுத்த நாள் சரியான பசியை உருவாக்கவும் இது உதவுகிறது. இரவு உணவுக்குப் பிறகு சிறிய நடைபயிற்சி மேற்கொள்வது செரிமானத்தை மேலும் எளிதாக்கும். செரிமான மண்டலத்திற்கு போதுமான ஓய்வு கொடுப்பது நீண்ட கால உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: இரவு நேரங்களில், இதை செய்யாதீங்க... மெதுவாக அழியும் ஆரோக்கியம்..!