தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?.. தாய்மார்களே தெரிஞ்சிக்கோங்க.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?.. தாய்மார்களே தெரிஞ்சிக்கோங்க.. அசத்தல் டிப்ஸ் இதோ.!


What eat to increase breast milk

குழந்தை பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். பிறந்த குழந்தைக்கு தாய் குறைந்தபட்சம் கட்டாயம் ஆறு மாதமாவது தாய்ப்பால் வழங்க வேண்டும். இன்று தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க சாப்பிட வேண்டியவை குறித்து காணலாம்.

1. பாகற்காய்: பாகற்காயில் நிறைந்து காணப்படும் Saponins மற்றும் Terpenoids இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கரைக்க கூடியது. இது சர்க்கரை நோயுள்ள தாய்மார்களுக்கு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும்.

health tips

2. கறிவேப்பில்லை: ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. இது இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பாஸ்பிரஸ், கால்சியம், இருப்பு சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

3. தண்ணீர்: தாய்ப்பாலில் நீர் நிறைந்து காணப்படும் காரணத்தால், நாம் தண்ணீரை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாவிடில் தாய்ப்பாலின் அளவும் குறையும். ஆகையால், குறைந்தது நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடித்திருக்க வேண்டும். 

health tips

4. கொண்டைக்கடலை: நார்சத்து, புரதம், வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் கொண்டைக்கடலை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். 

5. பால்: கால்சியம், புரதம், கொழுப்பு, போலிக் அமிலம் நிறைந்து காணப்படும் பால், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும். அதேபோல சாலமன் மீன், தர்பூசணி, நாட்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், முருங்கை கீரை, பீட்ரூட், பருப்பு போன்றவையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும் உணவுகள் ஆகும்.