அடடே.. அசத்தல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த கீரைகள்.. மக்களே மறந்துடாதீங்க.!

அடடே.. அசத்தல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த கீரைகள்.. மக்களே மறந்துடாதீங்க.!



Spinaches Keerai Benefits Tamil

கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் கிடைக்கிறது. மேலும், தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அத்துடன் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும்.

உணவில் முருங்கைக் கீரை, பருப்பு கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, நச்சுக்கொட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சியும், ஊட்டச் சத்தும் கிடைக்கும்.

Keerai

வல்லாரைக் கீரை :

வல்லாரைக் கீரையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் செயல்பட வைப்பதுடன் ஞாபகசக்தியை  அதிகரிக்கும். அத்துடன் இதில் தாது உப்புகள் மற்றும் சுண்ணாம்பு சத்து, வைட்டமின்கள் ஆகியன அடங்கியுள்ளன. மற்ற கீரைகளைப் போலவே இதனையும் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த ஊட்டச்சத்தை அளிக்கும்.

மணத்தக்காளிக் கீரை :

மணத்தக்காளிக்கீரையை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இருப்பதற்காகவும், உடல் சூட்டை தணிப்பதற்கும் உதவும். மேலும், இந்தக் கீரையின் இலைகளை ஒரு நாளுக்கு 4 முதல் 5 முறை நன்றாக மென்று சாற்றை விழுங்கி விட்டால் வாய் மற்றும் வயிற்றுப்புண் ஆகியவை நீங்கும்.

Keerai

முருங்கைக்கீரை :

முருங்கைக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, தாதுப்பொருள்கள், வைட்டமின் மற்றும் புரதம் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், முருங்கைக்கீரை சாப்பிடுவதன் மூலமாக ரத்தசோகை சரியாகும். அத்துடன் இவை கண் பார்வையையும், எலும்புகளையும் மிகவும் பலப்படுத்தும்.

பருப்புக்கீரை :

பருப்புக்கீரை பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டிய ஒன்றாகும். இதில் கால்சியம் சத்து மிகவும் அதிகமாக நிறைந்துள்ளதால், ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது. மேலும், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.

Keerai

நச்சுக்கொட்டைக்கீரை :

நச்சுக்கொட்டைக் கீரையில் இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளது. இதனால் மூட்டு தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு உதவுகிறது. அத்துடன் குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் உடல் பிரச்சனைகளையும் நச்சுக்கொட்டைக் கீரை குணப்படுத்துகிறது.