கோடையில் அடிக்கடி கீரைகளை சாப்ப்பிடுவதால் என்னாகும் தெரியுமா.?!



Spinach benefits in summer 

கோடைகாலம் வந்தாலே நாம் அன்றாட உணவில் என்ன சாப்பிடுவது என்பது பலருக்கும் தெரியாது. இதனால் சந்தைக்கு சென்று ஏதாவது மலிவாக கிடைப்பதை பார்த்து வாங்கிக் கொண்டு வந்து விடுவோம். கோடைகாலத்தில் நமது உடலில் நீர் சத்து குறைவதால் உடல் சோர்வு மற்றும் தலைவலி உள்ளிட்டவை ஏற்படும். எனவே சந்தைக்கு செல்லும் போது கண்டிப்பாக கீரை வகைகளை அதிகப்படியாக வாங்கிக் கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவது நல்லது. இது கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன், நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தலைவலி உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை நீக்கும். 

summer

பச்சை நிறத்திலான கீரைகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் நமது உடலில் கால்சியம், விட்டமின்கள் மற்றும் நார் சத்துக்கள் உள்ளிட்டவை கிடைக்கும். கோடை காலத்தில் அதிகப்படியாக வியர்ப்பதால் நாம் நிறைய சத்துக்களை இழக்க நேரிடும். எனவே அவற்றை மீட்டெடுக்க நமக்கு கீரை உணவு மிக முக்கியம் . கோடை காலத்தில் அதிகப்படியான சோர்வு ஏற்படும். மேலும், மலச்சிக்கல் உள்ளிட்டவை ஏற்படும். இவற்றை தடுக்க தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்த கீரைகளை எடுக்கும் போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உஷ்ணம் தாங்காமல் முடி கொட்டுவதை தடுக்கவும் இந்த கீரைகள் உதவுகிறது. 

இதையும் படிங்க: "ஆயுளை அதிகப்படுத்தும் பழைய சோறு" பழைய சோறு சாப்பிடுவதால் சளி தொல்லை ஏற்படுகிறதா.!?

summer

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கீரைகளில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ இருக்கும் கீரைகளை எடுத்துக் கொள்ளும் போது நமது கண் பார்வையும், சரும ஆரோக்கியமும் மேம்படுகிறது. அன்றாடம் ஒரு கைப்பிடி அளவு கீரையையாவது நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நமது உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: கோடை விடுமுறையில் இதெல்லாம் நடத்தக்கூடாது.. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடி அறிவிப்பு.!