கொரோனா வைரஸ் எதிரொலி! 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனை!
சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் தோன்றிய கொரனோ வைரஸ் தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. இந்த கொடூர வைரஸால் சீனாவில் மட்டும் இதுவரை 350 பேர் உயிரிழந்துள்ளதக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனிலையில், இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீன நாட்டு மக்களை காப்பாற்றும் வகையில், சீன அரசு வுஹான் நகரில் 25 ஆயிரம் சதுர மீட்டரில், ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையை கடந்த மாதம் 23 ஆம் தேதி கட்டத் தொடங்கியது.

10 நாட்களில் கட்டிமுடிக்கத் திட்டமிட்ட பணியில், ஏழாயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பணிகள் விரைவாக நடைபெற்ற நிலையில், திட்டமிட்டதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நேற்றைய தினம் மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.
இன்று முதல் இந்த மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவமனையானது சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீன ராணுவத்தின் 1400 மருத்துவப் பணியாளர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.