சத்து நிறைந்த சிவப்பு அரிசியில், சுவையான பாயசம் செய்வது எப்படி?..!
சிவப்பு அரிசியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இன்று அதில் பாயசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள் :
சிவப்பரிசி - 5 தேக்கரண்டி
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி பாதாம் - 12
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போன்று உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
★பின்னர் பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
★கொதி வந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை நன்கு கலந்ததும் பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான சிவப்பரிசி பாயாசம் தயார்.