தினமும் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து; மருத்துவர் கூறும் தகவல் இதோ...!!

தினமும் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து; மருத்துவர் கூறும் தகவல் இதோ...!!


regarding-the-benefits-of-drinking-hot-water-daily-here

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பிரபல ஆயுர்வேத மருத்துவர் நித்திகா, தனது இன்ஸ்டாவில் தினசரி வெந்நீரை குடிப்பதால் கிடைக்கும் பல நன்மைகளை பற்றிய தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார்.

குளிர் காலம் கடுமையாக இருக்கும் நேரத்தில் மூக்கு அடைப்பது ஏற்படுவது‌ இயல்பாகவே இருக்கும். அந்த நேரத்தில் ஒரு கப் சூடான தண்ணீர் குடிப்பது மூக்கடைப்பை குறைக்க உதவுகிறது.

மலச்சிக்கல் உண்டாக முக்கிய காரணம் உடல் நீரிழப்பை சந்திப்பது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் சுடு தண்ணீரைக் குடிப்பது குடல்களை மீண்டும் சாதாரணமாக இயக்க ஒரு சிறந்த வழி என்று மருத்துவர் நித்திகா கூறுகிறார்.

மேலும் தினசரி சூடான தண்ணீர் குடிப்பது நம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று கூறுகிறார். மாதவிடாயின் போது வெந்நீரைக் குடிப்பதன் மூலமும் மாதவிடாய் வலி குறையும் என்கிறார் நித்திகா. அதுமட்டுமின்றி, தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வருவது சருமம் வயதாவதை தடுக்கிறது மற்றும் முகப்பரு, தழும்புகளை நீக்குகிறது. 

காலை நேரங்களில் சாப்பிடுவதற்கு முன்பு வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது. வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் வாயுவை குணப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் ஃபோர்ஜின் எலமென்ட்ஸ் மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடல் அமைப்பை சுத்தப்படுத்துகிறது என்று கூறுகிறார் மருத்துவர் நித்திகா.