இந்த தண்ணீரை தினம் குடிச்சா.. கிளாஸி ஸ்கின் கிடைக்குமா.? மருத்துவம் சொல்வதென்ன.?!



raisin water for glassy skin type

ஒரு கைப்பிடி உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன் நமது சரும ஆரோக்கியம் மேம்படுகிறது. உலர் திராட்சையில் அதிகப்படியான இரும்பு, பொட்டாசியம், விட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இதனால், சரும அமைப்பை அது மேம்படுத்தி மந்தமான தன்மையை எதிர்த்து போராடுகிறது. உடலை ஹைட்ரேஷனுடன் வைக்கவும் இது உதவுகிறது. சமூக வலைதளங்களில் இந்த நீரை பருகுவதால் கண்ணாடி போன்ற சரும அழகு கிடைக்கும் என்று தகவல்கள் பரப்பப்படுகின்றன. 

raisin water

இந்த உலர் திராட்சை நீரை குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் மேம்படுவதால் அது தோலில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாது தான். அதற்காக கண்ணாடி போன்ற சருமத்தை அது நிச்சயம் கொடுக்கும் என்று உறுதியாக கூற முடியாது. 

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சிக்கன்.. இப்படி சாப்பிட்டால் போதும்.!

இதன் ஆக்சிஜனேற்ற உள்ளடக்கம் முகப்பருவை சரி செய்கிறது. நச்சுக்களை வெளியேற்றி உடலை நீரேற்றத்துடன் வைக்கிறது. எனவே, தோல் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் இந்த நீர் சரி செய்கிறது. 

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றுகிறது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி உடலையும், முகத்தையும் பொலிவுடன் வைக்க இது உதவுகிறது.

இதையும் படிங்க: அடடே செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? டிப்ஸ் இதோ.!