இந்த ஏழு அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? ஹார்ட் ப்ராப்ளமாக இருக்கலாம்..! எச்சரிக்கைப் பதிவு..!

இந்த ஏழு அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? ஹார்ட் ப்ராப்ளமாக இருக்கலாம்..! எச்சரிக்கைப் பதிவு..!



precautions-for-heart-problems

நம் உடலில் உள்ள மிக மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று 'இதயம்'. எனவே, அது நன்றாக செயல்படுவதை நாம் உறுதி செய்யவேண்டும். எந்த ஒரு நோயாக இருந்தாலும், அது முன்னரே அறிகுறிகளைக் காட்டுகிறது.

Heart

இதய செயலிழப்பு என்பது ஒரு ஆபத்தான நிலை. இந்த நிலை ஏற்பட்ட ஒருவரின் இதயம், ரத்தத்தை பம்ப் செய்யும் திறனை இழந்துவிடுகிறது. இதய செயலிழப்புக்கான அறிகுறிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டால், உயிருக்கே ஆபத்தாகிவிடும். 

இதய செயலிழப்புக்கான பொதுவான அறிகுறிகளில் சில: மூச்சுத்திணறல், இருமல், சோர்வு மற்றும் பலவீனம், மூட்டுகளில் வீக்கம், எடை அதிகரிப்பு, படபடப்பு, குமட்டல் மற்றும் பசியின்மை.

Heart

ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் , தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும். மன அழுத்தம், ரத்த அழுத்தம் இரண்டும் இதய செயலிழப்புக்கு முக்கிய காரணிகளாகும்.