காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...!Morning Wake Up Tips

தினமும் காலை நேரத்தில் எழுந்திருக்கும் போதே சிலரிடம் சோம்பல் நிலையம் எட்டிப்பார்க்கும். நமது நாளினை எந்த அளவிற்கு உற்சாகமாக தொடங்குகிறோமோ, அந்த அளவு நாளின் செயல்பாடுகளும் அமைகிறது. காலையில் சில நல்ல விஷயங்களை கடைபிடித்து வருவதால் உற்சாகமாக அந்நாளினை தக்கவைத்துக்கொள்ளலாம்.

இன்றுள்ள காலத்தின் கட்டாயத்தால் காலையில் எழுந்ததும் பலரும் கைகளால் கண்களை மூடிக்கொண்டே செல்போனை தேடுகிறோம். செல்போனில் சில மணித்துளிகளை செலவிட்டதும் எழுந்திருக்கிறோம். இப்படியான செயலை செய்வதால் கண்களில் சோர்வு எட்டிப்பார்க்கிறது. இது காலை நேரத்தின் உற்சாகத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். 

காலை நேரத்தில் செல்போனை பார்ப்பதற்கு பதில், தினசரி நாளிதழ்களை வாசிக்கலாம். புத்தகம் படிக்கலாம். இவற்றின் வாயிலாக அன்றாட நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ளலாம். மனதும் அமைதி அடைகிறது. 

Tips

காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் இருந்தால், அதனை தவறாது பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சிக்கு குறைந்தபட்சம் 15 நிமிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது உடல் தசையை இலகுவாக்குகிறது. மனதை அமைதியாக்குகிறது. உடற்பயிற்சி செய்ததும் தண்ணீர் பருக வேண்டும். சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிடலாம். 

குளிக்க செல்வதற்கு முன்னதாகவே இன்றைய நாளில் செய்ய வேண்டிய விஷயம் குறித்து பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். எந்த வேலையை முதலில் செய்யலாம்? எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என திட்டமிட்டு செயல்பட வேண்டும்.