சிறுநீரக செயலிழப்பை காட்டும் முக்கியமான அறிகுறிகள்..! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்கள்..!



Kidney failure symptoms in tamil

நமது உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஓன்று சிறுநீரகங்கள். உடலில் இருக்கும் கழிவுகள், நச்சுக்களை வெளியேற்ற சிறுநீரகங்கள் உதவி செய்கிறது. உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல் உடலில் தங்கிவிடுவதையே சிறுநீரக செயலிழப்பு என்கிறோம். சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.

பொதுவாக சிறுநீரக செயலிழப்பை பின்வரும் அறிகுறிகள் மூலம் நாம் கண்டறியலாம்.

1 . சிறுநீரில் பிரச்சனை:
சிறுநீர் வெளியேறும்போது நுரை நுரையாக வெளியேறுவது, வழக்கத்தைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது, சிறுநீர் வருவது போன்று இருக்கும் ஆனால் சிறுநீர் வராமல் இருப்பது போன்றவை சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறிகள்.

2 . கை, கால்களில் வீக்கம்:
உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற நீரை சிறுநீரகம் வெளியேற்ற முடியாமல் நீர் உடலில் தங்கியிருப்பதால் கை, கால், பாதம், முகம் போன்றவற்றில் வீக்கம் ஏற்படும்.

3 . அதிக சோர்வு மற்றும் இரத்த சோகை:
நமது உடலில் இருக்கும் சிறுநீரகம் எரித்ரோபோய்டின் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ஆக்சிஜென் ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகங்கள் பாதிப்படைந்தால் இந்த ஹார்மோன் சுரப்பது தடைப்பட்டு ஆக்சிஜென் ரத்த சிவப்பு அணுக்களை எடுத்து செல்லும் வேகம் குறையும். இதனால் சோர்வு, இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

4 . மறதி, தலைசுற்றல்:
சிறுநீரகங்கள் செயலிழக்கும் பொது நமது மூளைக்கு தேவையான ஆக்சிஜன் குறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.

5 . குமட்டல் / வாந்தி:
சிறுநீரகத்தில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் குமட்டல் ஏற்பட்டு வாந்தி வர வாய்ப்புள்ளது. அதுவே, காய்ச்சல் ஏற்பட்டு குமட்டல் வந்தால் உங்கள் சிறுநீரகத்தில் சிறுநீர் கற்கள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.