உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் காலிபிளவர் சுக்கா.. வீட்டிலேயே சுவையாக 10 நிமிடத்தில் செய்வது எப்படி?..!!

உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் காலிபிளவர் சுக்கா.. வீட்டிலேயே சுவையாக 10 நிமிடத்தில் செய்வது எப்படி?..!!



how to prepare cauliflower chukka

உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் காலிபிளவர் சுக்கா வீட்டிலேயே செய்வது எப்படி என தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் - ஒன்று 
வெங்காயம் - 150 கிராம் 
தக்காளி - 150 கிராம் 
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி 
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி 
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி 
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி 
கொத்தமல்லி - தேவைக்கேற்ப 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 
கரம் மசாலா - அரை தேக்கரண்டி

தாளிக்க :

பட்டை - ஒன்று 
பிரியாணி இலை - ஒன்று 
ஏலக்காய் - ஒன்று 
கிராம்பு - இரண்டு 
சோம்பு - ஒரு தேக்கரண்டி 
கருவேப்பிலை - தேவைக்கேற்ப

செய்முறை :

★முதலில் காலிஃப்ளவரை நீரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து காலிஃப்ளவரை தனியாக ஒரு தட்டில் எடுத்துவைக்க வேண்டும்.

★பின் கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை தண்ணீரில் ஊற்றி வேகவைத்து தோல்நீக்கி அரைத்துக்கொள்ள வேண்டும்.

★அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

★வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.

★பின் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

★அடுத்து மசாலா பச்சை வாசனை போனவுடன், அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவைக்க வேண்டும். இறுதியாக மசாலா நன்றாக காலிபிளவருடன் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி, மிளகுதூள் தூவி இறக்கினால் தயாராகிவிடும்.