அந்த விசயத்துல 1 நிமிடத்திற்குள் முடிந்துவிடுகிறதா? முந்துகிறதா? அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக.!



how-to-avoid-premature-ejaculation

 

தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்தியத்தில், விரைவில் விந்து வெளியேறுதல் பிரச்சனை ஆண்களுக்கு காணப்படும். தம்பதியத்தின்போது சுமார் 1 நிமிடம் முதல் 3 நிமிடத்திற்குள் விந்து வெளியேறுதல், விரைவில் விந்து வெளியேறுதல் அல்லது விந்து முந்துதல் என மருத்துவ நிலைகளில் அழைக்கப்படுகிறது. 

ஒரு நாளின் சராசரி தாம்பத்தியம் 5 நிமி முதல் 7 நிமி வரை இருக்கும் என மருத்துவம் கூறுகிறது. 10 நிமிடம் வரை அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தாம்பத்தியம் நீளமான தாம்பத்தியம் என கணக்கிடப்படுகிறது. இதில் அந்தந்த நபரின் உச்சக்கட்டத்திற்கு ஏற்ப காலநிலை மாறுபடும். 

இதையும் படிங்க: இந்த தண்ணீரை தினம் குடிச்சா.. கிளாஸி ஸ்கின் கிடைக்குமா.? மருத்துவம் சொல்வதென்ன.?!

உளவியல் ரீதியான காரணம்

விந்தணு வெளியேற்ற நேரம் என்பது தாம்பத்தியத்திற்கு முன்னான விளையாட்டு, முத்தம் போன்றவற்றை தவிர்த்து உள்ளது ஆகும். விரைந்து விந்தணு வெளியேறுதல் என்பது உளவியல் மற்றும் உடல் காரணிகளை கொண்டது. மனசோர்வு, பயம், பதற்றம், குற்ற உணர்ச்சி, தாம்பத்தியத்திற்கு முன்பே அதிக மனக்கற்பனை போன்றவை விந்தணுவை விரைந்து வெளியேற்றுகிறது. இது உளவியல் ரீதியான காரணமாகவும் பார்க்கப்படுகிறது. 

18 plus

அதேபோல, ஒழுங்கில்லாத ஹார்மோன் அளவு, குறைந்த டெஸ்ட்டிரோஜன் அளவு, மூளை ரசாயனத்தின் அளவு குறைவு, சிறுநீர்க்குழாய் வீக்கம், சிறுநீரக தோற்று, இரத்த அழுத்த பிரச்சனை, நீரிழிவு நோய், உடற்பருமன் போன்றவையும் விரைவில் விந்தணுவை வெளியேற்றும். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மனசோர்வு ஏற்படும்.

சாப்பிட வேண்டியவை

இதனால் மேற்கூறிய பிரச்சனையை தவிர்க்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் சூடு குறைய குறைந்தது வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டர் நீர் குடிப்பது கட்டாயம். மாதுளை, செவ்வாழை, தர்பூசணி, திராட்சை போன்றவற்றை சுழற்சி முறையில் சாப்பிட வேண்டும். மலச்சிக்கலை தவிர்க்க உறங்கும் முன் சூடான நீர் குடித்துவிட்டு உறங்கலாம். 

18 plus

பயம், கவலை, பதற்றம், மனசோர்வு சரியாக தியானம் அவசியம். குறைந்தது நாளொன்றுக்கு 7 முதல் 8 மணிநேரம் உறங்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிளிங் செய்யலாம். உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, பசலைக்கீரை, தூதுவளை, அரைக்கீரை, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், பேரீட்சை, சுரைக்காய், புடலங்காய், பூசணி, முட்டை, பால், தயிர், நெய் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இவை முக்கியம்

உணவில் முருங்கைப்பூ, முருங்கைக்கீரை, முருங்கைக்காய், பசலைக்கீரை, அரைக்கீரை, தூதுவளை, பாதாம், பிஸ்தா, வால்நட், பூசணி விதை, முருங்கை விதை, அத்திப்பழம், பேரீட்சை பழம், சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், முட்டை, பால், தயிர், மோர், நெய் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்கும் சிக்கன்.. இப்படி சாப்பிட்டால் போதும்.!