மருத்துவம் லைப் ஸ்டைல்

மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை! ஆரம்பத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோயே வராது!

Summary:

How to avoid Avoid sugar

மனிதன் நோய்நொடி இல்லாமல் வாழ தினமும் கொய்யா பழத்தை சாப்பிடுவது சிறந்தது. இந்த கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை பலரும் அறியமாலே விட்டுவிட்டனர். 

கொய்யாப் பழத்தை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இதனால் நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

தற்போதைய வாழக்கை முறையில் சர்க்கரை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் ஒரு மாத்திரை ஆகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இப்பழத்தை நன்கு பழுத்த பிறகு சாப்பிடுவதை தவிர்த்து காயாக சாப்பிடுவது சிறந்தது. கொய்யா மரத்தில் உள்ள நுனி இலைகளை வேகவைத்து அந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலனைத் தருகிறது. கொய்யாப் பழத்தின் விதைகளை முழுமையாகவோ அல்லது மென்று உண்டால் மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் நீங்கும். மேலும் மன அழுத்தத்தினையும் குறைத்து உங்கள் உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஆற்றாலையும் ஊகத்தினையும் கொடுக்கிறது.


Advertisement