இதெல்லாம் தெரிஞ்சா நீங்க வெந்தயத்தை வேண்டாம்னு சொல்ல மாட்டீங்க! அவளோ நன்மைகள் இருக்கு!

இதெல்லாம் தெரிஞ்சா நீங்க வெந்தயத்தை வேண்டாம்னு சொல்ல மாட்டீங்க! அவளோ நன்மைகள் இருக்கு!



health-benefits-of-vendhayam-in-tamil

உணவே மருந்து என்ற அடிப்படையில் வெந்தயத்தில் வியக்கத்தக்க பல மருத்துவ குணங்கள் ஒருங்கே அமைந்துள்ளன.

தினமும் நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் பலவிதமான மருத்து நன்மைகள் நிறைந்துள்ளன.

வெந்தயம் சமையலில் பயன்படுத்தும் போது உணவு நல்ல மணமுள்ளதாகவும், சுவையுள்ளதாகவும் இருக்கும். அதே வேளையில் நம் உடல் நலத்திற்கும் பலவிதமான நன்மைகளை வழங்கிறது.

இவ்வெந்தய விதைகளில் மட்டுமல்லாமல், வெந்தயக் கீரையிலும் நன்மைகள் பல அடங்கியுள்ளன.

health tips

முக்கியமாக இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருகினால் நன்மைகள் பல கிடைக்கும்.

கொலஸ்ட்ரால் குறைய

கொலஸ்ட்ரால் என்பது தற்போது மார்டன் உலக அளவில் பெரும் பிரச்னையாகவே உள்ளது. அத்தகைய கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை வெந்தயம் போக்கும்.

ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள உட்பொருட்கள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இதற்கு வெந்தயத்தில் உள்ள ஸ்டெராய்டல் சாப்போனின்கள் தான் காரணம். இது தான் நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க

உலகில் எங்கு பார்த்தாலும் சர்க்கரை குறைபாடு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. அதனால், சர்க்கரை குறைபாடு வராமல் தடுப்பதற்கு தினமும் வெந்தயத்தை சமையலில் சேர்த்து வந்தாலே, சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

இருதயத்தை இதமாய் வைத்திருக்க

மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே இருதய நோய் பிரச்னைகள் அதிகம் உண்டாகிறது.

அதனால் இருதயம் இதமாய் இருக்க வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வர வேண்டும். இதில் உள்ள பொட்டாசியம், சோடியத்தின் செயல்பாடுகளைக் குறைத்து, இருதயப் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும்.

தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல் குறைய

சிக்கன் சூப்பில் வெந்தயத்தை பொடி செய்து சேர்த்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எடை குறைய

தினமும் அதிகாலையில் எழுந்ததும் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், பசி கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது குறையும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், வெந்தயத்தை உணவில் சேர்த்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். ஏனென்றால் இதில் உள்ள டையோஸ்ஜெனின், தாய்ப்பால் சுரப்பதை அதிகரிகக்கும்.

மாதவிடாய் கால வேதனைகள் கட்டுப்பட

மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, தசைப் பிடிப்புகள் போன்றவை அதிகம் இருந்தால், வெந்தயத்தை களி செய்து சாப்பிடும்போது அவஸ்தைகள் குறையும்.

குடல் புற்றுநோயை குணப்படுத்த

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்துக்களான சாப்போனின்கள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றச் செய்து, குடல் புற்றுநோயில் இருந்து நம்மை விலகி இருக்கச் செய்யும்.

அதனால், அன்றாட உணவில் வெந்தயத்தை பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.