மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஹா.. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால்… இவ்வளவு நன்மைகளா..!

Summary:

நமது உடலுக்கு பல நன்மைகள் தரும் பொருட்களில் ஒன்று வெந்தயம். காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நமது உடலுக்கு பல நன்மைகள் தரும் பொருட்களில் ஒன்று வெந்தயம். காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

வெந்தயத்தில் அதிக அளவு வைட்டமின் எ, வைட்டமின் சி, இரும்புசத்து, வைட்டமின் பி-6, மெக்னீசியம், நார்சத்து. புரதம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

வெந்தயத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவுகிறது. சிறிதளவு வெந்தயத்தினை நீரில் ஊறவைத்து பின்பு அதை அரைத்து முகத்தில் பூசி, பின் 30 நிமிடம் கழித்து முகத்தினை குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் உங்களின் முகம் பொலிவுடன் காணப்படும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி வெந்தயத்திற்கு உண்டு. உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் வெந்தயம் பயன்படுகிறது. சிறிது அளவு வெந்தயத்தினை தினமும் காலை நீரில் ஊறவைத்து வெறும் வயற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடையும்.

இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை போன்றவற்றை குணப்படுத்த வெந்தயம் பயன் படுகிறது. வெந்தயத்தில் அதிக அளவிலான நார் சத்து இருப்பதால் தினமும் காலையில் வெந்தயத்தை உண்டுவந்தால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராகும்.


Advertisement