தினமும் பாதாம் சாப்பிட்டால் அந்த விஷயத்திற்கு இவ்வளவு நன்மையா.?

தினமும் பாதாம் சாப்பிட்டால் அந்த விஷயத்திற்கு இவ்வளவு நன்மையா.?



health-benefits-in-badham


நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம், நம் மூளையை கூர்மையாக்குகிறது. நம் உடல் திசுக்களை வலுவாகவும், சருமத்தை இளமையாகவும் வைத்திருக்கிறது.

badam

ஆயுர்வேதத்தில், ஊறவைத்த பாதாமின் தோலை நீக்கிய பின்பே, அதை உட்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாதாமில் வைட்டமின் ஈ , துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்துள்ளன.

பாதாமின் தோல் ஜீரணிக்க கடினமாகவும், அப்படியே சாப்பிட்டால் ரத்தத்தில் பித்தத்தின் அளவை அதிகரிக்கவும் செய்யும். தினமும் பாதாம் உட்கொள்ளவதால், செரிமானப் பிரச்சனைகள் நீங்கி, உடல் எடை குறைக்கவும் உதவும்.

badam

பாதாமின் ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுதாகக் கிடைக்க, அதை வெதுவெதுப்பான நீரில் இரவே ஊறவைத்து, காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதே சிறந்தது. தினமும் 10 எண்ணிக்கையில் ஒருவர் ஊறவைத்த  பாதாம் சாப்பிடலாம். மேலும் தாம்பத்திய உறவிற்கும் பாதாம் உகந்த உணவாக கருதப்படுகிறது.