"உயர் இரத்த அழுத்த பிரச்சனையா..." 3 பழங்கள் போதும்.!! கவலையே வேண்டாம்.!!



fruits-that-can-control-high-bp-issue

உயர் ரத்த அழுத்தம் ஆபத்தான நோய்களில் ஒன்று. இதன் காரணமாக இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருக்கக்கூடியவர்கள் அடிக்கடி மருத்துவர்களை சந்தித்து பரிசோதித்துக் கொள்வது நலம். மேலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் நாம் உணவாக பயன்படுத்தும் சில பழங்கள் நமது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது போன்ற பழங்களை இந்த பதிவில் காணலாம்.

கொய்யாப்பழம்

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் கொய்யாப்பழம் முக்கியமானதாக விளங்குகிறது. தினமும் கொய்யாப்பழம் எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நம் உடலின் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கிறது.

health tips

வாழைப்பழம்

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் வாழைப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. இதில் பொட்டாசியம் சத்து நிறைந்திருக்கிறது. இது நம் ரத்தத்தில் சோடியத்தின் அளவை சரியாக வைத்திருப்பதோடு ரத்த நாளங்களை எப்போதும் தளர்வாக வைத்துக் கொள்கிறது. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இது நமது உடலில் நீர்ச்சத்தையும் பராமரிக்கிறது. வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய மக்னீசியம் சத்து நமது ரத்த நாளங்களை தளர்வடைய செய்கின்றது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது.

இதையும் படிங்க: இதயத்தை காக்கும் ஆம்லா... வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்.!! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா.!!

மாம்பழம்

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பழங்களில் ஒன்றாக இருப்பது மாம்பழம். இது பொட்டாசியம் சத்தை அதிகமாக கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் மாம்பழங்களில் இருக்கக்கூடிய மாஞ்சிஃபெரின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் நம் உடலின் வீக்கத்தை குறைக்கிறது. இதன் காரணமாகவும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: PCOD பிரச்சனையால் அவதியா.? 30 நாளில் சூப்பரான தீர்வு.!! எளிமையான வீட்டு வைத்தியம்.!!