இதயத்தை காக்கும் ஆம்லா... வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்.!! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா.!!



health-benefits-of-drinking-gooseberry-juice-in-empty-s

நெல்லிக்காய் மனித இனத்திற்கு இறைவன் வழங்கிய இயற்கை அருட்கொடைகளில் முதன்மையானதாக இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, பி 6, வைட்டமின் இ,சி போன்றவை நிறைந்திருக்கிறது. இவை தவிர பொட்டாசியம் மற்றும் மாங்கனிஸ் போன்ற தாதுக்களும் அதிக அளவில் இருக்கிறது. மேலும் இவற்றில் நார்சத்தும் நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களை உள்ளடக்கிய நெல்லிக்காய் ஜுஸை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இதய ஆரோக்கியம்

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் நம் உடலில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தவிர்க்கப்படுகிறது. மேலும் இவை நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால்களை நீக்கி நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய பொட்டாசியம் சத்து நம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த பொட்டாசியம் நம் உடலில் ரத்த அழுத்தம் உயராமல் கட்டுக்குள் வைக்கிறது. இவை மாரடைப்பு அபாயத்தை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

health tips

ரத்தம் சுத்திகரிப்பு

நெல்லிக்காயில் இருக்கக்கூடிய சத்துக்கள் மற்றும் அமிலங்கள் நம் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகுவதோடு இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. நெல்லிக்காயில் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. இவை நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக ரத்த சோகை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தும் கிடைக்கிறது.

இதையும் படிங்க: PCOD பிரச்சனையால் அவதியா.? 30 நாளில் சூப்பரான தீர்வு.!! எளிமையான வீட்டு வைத்தியம்.!!

உடல் எடை குறைப்பதில் நெல்லிக்காய் ஜூஸின் பங்கு

காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும். இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இவை நம் உடலின் செரிமானத்தை சீர்படுத்துவதோடு உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகின்றன. இதனால் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவதால் உடல் எடை குறைகிறது. மேலும் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் நம் கண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளின் வலிமைக்கும் நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது.

இதையும் படிங்க: நீரிழிவு நோயா.?? இந்த ஒரு பானம் போதும்.!! 15 நாளில் நம்பமுடியாத மாற்றம்.!!