
உடலில் புத்துணர்ச்சி தரும் முருங்கைக்கீரை அனைவரும் தினமும் சாப்பிடலாம்..!
ஒரு சில தாவரங்களின் அனைத்து பகுதிகளையும் நாம் உணவாகவோ, மருந்தாகவோ, பயன்படுத்த முடியும் அந்த வகையில் முருங்கை மரத்தினுடைய அனைத்து பகுதிகளும், நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. முருங்கை மரத்தில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கின்றது. இந்த முருங்கை இலைகள் அல்லது முருங்கைக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படும். இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் சரியாகிவிடும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாக முருங்கை கீரை இருக்கிறது. முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.
குளிர்காலம் காலங்களிலும், தூசுகள் நிறைந்த இடங்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். இத்தகைய பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் முருங்கை கீரையை சூப் செய்து, குடித்து வரலாம். சுவாச சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் முருங்கைக்கீரை நல்ல தீர்வாக அமையும்.
Advertisement
Advertisement